Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Shehan Semasinghe) அரசாங்கத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளார்.
பொதுக்கடன் முகாமைத்துவ சட்டமூலம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பின் போது அமைச்சர் இந்த புள்ளிவிபரங்களை வெளிப்படுத்தினார்.
இதன்படி உள்நாட்டு கடன் தொகை 2023 டிசம்பர் 31 இல் 17,051 பில்லியனாகவும், 2024 மார்ச் 31இல் 17,252 பில்லியன் ரூபாய்களாகவும் மதிப்பிடப்பட்டதாக சேமசிங்க குறிப்பிட்டார்.
ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கை வந்த பெண் கொடூரமாக கொலை – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
37 பில்லியன் அமெரிக்க டொலர்
இதன்படி வெளிநாட்டு கடன் தொகை 37 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
இதில் 2022 ஏப்ரல் முதல் 5.5 பில்லியன் டொலர் நிலுவையில் உள்ள வெளிநாட்டு கடன் தவணைகள் அடங்கும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை இலங்கை பலதரப்புக் கடனைச் செலுத்தியிருந்தாலும், இருதரப்புக் கடன்களை இன்னும் செலுத்தவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். குடாநாட்டின் தீவுகளால் தஞ்சாவூர் விமான தளத்திற்கு நெருங்கும் ஆபத்து
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரிடம் சிக்கிய பெண்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |