Home இலங்கை பொருளாதாரம் விஎப்எஸ் குளோபல் விசா பிரச்சினை புதிய திருப்பம்

விஎப்எஸ் குளோபல் விசா பிரச்சினை புதிய திருப்பம்

0

Courtesy: Sivaa Mayuri

வெளிநாட்டவர்களுக்கு இலங்கை விசா வழங்கும் செயன்முறைக்கு விஎப்எஸ் குளோபலின் (VFS Global) சேவைகளைப் பெற்றமை தொடர்பான பிரச்சினை புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என்றும் விசாரிக்க வேண்டாம் என்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை வலியுறுத்தியதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா ஆகியோர் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில், தாம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு விஎப்எஸ் குளோபல் விவகாரத்தில் அமைதியாகிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை மறுத்த ஹரின் பெர்ணான்டோ, அது உண்மையல்ல எனவும் அதனை தொடர்ச்சியாக எதிர்ப்பதாகவும இன்று (07.06.2024) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் சாபம்! இலங்கைக்கு விடிவு இல்லை – சபையில் சாணக்கியன் சீற்றம்

மரண அச்சுறுத்தல்

தாம் இந்த நடவடிக்கையை அமைச்சரவையிலும் சவாலுக்கு உட்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக விசா கட்டணங்களில் சிலவற்றை குறைக்க முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சபையில் இன்று இடம்பெற்ற இது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, விசா விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை நடத்தியமை காரணமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஹர்ச டி சில்வாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

எனினும், இதனை தெளிவுபடுத்திய ஹர்ச டி சில்வா, தமக்கு நேரடியாக மரண அச்சுறுத்தல் விடுக்கவில்லை என்றும், நாடாளுமன்றக் குழுவின் விசாரணையை நிறுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 

உயிர் ஆபத்து

அவர்கள் தம்மை நேரடியாக கொலை மிரட்டல் விடுக்கவில்லை என்றாலும் தனது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று தாம் கவலைப்படுவதாக தெரிவித்த ஹர்ச டி சில்வா, தாம் தெருவில் கொல்லப்பட்டால் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ச டி சில்வாவுக்கு அவரது சொந்த முகாமில் உள்ளவர்களே அச்சுறுத்தல் விடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் அவரைப் பற்றிய அறிக்கைகளை பதிவேற்றியவர் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் இல்லையேல் மீண்டும் போராட்டம் வெடிக்கும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு சஜித்துக்கே! ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version