அதிபர் தேர்தலில் 51% வாக்குகளைப் பெறுவது உறுதியானால், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராகத் தான் போட்டியிடுவேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேரா(dhammika perera) தெரிவித்துள்ளார்.
அதிபர் வேட்பாளராக தம்மிடம் பொதுஜன பெரமுன பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும் தற்போது அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலுக்கு இன்னும் 115 நாட்களே
எவ்வாறாயினும், அதிபர் தேர்தலுக்கு இன்னும் 115 நாட்களே உள்ளதால், அனைத்தும் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.