Home இலங்கை அரசியல் எனக்கு எதுவும் தெரியாது : சிஐடியிடம் கைவிரித்த கோட்டாபய

எனக்கு எதுவும் தெரியாது : சிஐடியிடம் கைவிரித்த கோட்டாபய

0

 கதிர்காமத்தில் மெனிக் நதியை ஒட்டியுள்ள அரசாங்க நிலத்தில் சட்டவிரோதமாக 12 அறைகள் கொண்ட கட்டிடத்தை கட்டிய நிலையில் G. ராஜபக்சவின் பெயரில் பெறப்பட்ட மின்சாரக் கட்டணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், அந்தக் கட்டிடத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச(gotabaya rajapaksa) குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்தி வரும் விசாரணை தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) கடந்த 17 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரணை நடத்தியது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவின் உழைப்பு

இந்த கட்டுமானப் பணிகள் 2010 க்கு முன்பு மேற்கொள்ளப்பட்டன. குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணைகளில், இராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவின் உழைப்புப் பங்களிப்புடன் இந்தக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கட்டிடம் கட்டப்பட்டதிலிருந்து கடற்படையைச் சேர்ந்த ஒருவர் அதைக் கவனித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவைப் பாதுகாக்க கடற்படை வீரர் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 யோஷித ராஜபக்சவிடம் விசாரணை

இது தொடர்பாக கடந்த 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் யோஷித ராஜபக்சவும்(yoshitha rajapaksa) விசாரிக்கப்பட்டார். அந்தக் கட்டிடத்தைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அவரும் கூறியிருந்தார்.

யோஷித ராஜபக்சவை விசாரிப்பதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சியிடமும் குற்றப் புலனாய்வுத் துறையினர் டிசம்பர் 27 அன்று விசாரணை நடத்தினர்.

அரசாங்க ஒதுக்குப் பகுதியில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் விசாரணை தொடங்கப்பட்டது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் விசாரணை நிறுத்தப்பட்டது. அந்தக் கட்டிடத்திற்கான மின்சாரக் கட்டணம் G-ராஜபக்ச என்ற ஒருவரின் பெயரில் பெறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version