Home இலங்கை அரசியல் கம்மன்பிலவுக்கு ரணிலின் நிலை! கைதில் இருந்து விடுபட மேற்கொண்டுள்ள தீவிர முயற்சி

கம்மன்பிலவுக்கு ரணிலின் நிலை! கைதில் இருந்து விடுபட மேற்கொண்டுள்ள தீவிர முயற்சி

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) நடந்தது போல எனக்கும் நடக்கலாம் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று(18.09.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அறிவித்த படி நாட்டுக்கு வரும் போது கைது செய்வதற்கான சாத்தியம் இல்லை என்றே கூறியுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு

காவல்துறையிடம் வாக்குமூலம் ஒன்று கொடுக்க வேண்டியுள்ளது. அதன் பின்னரே நான் கைது செய்யப்படுவது தீர்மானிக்கப்படும். ரணில் விக்ரமசிங்கவுக்கு நடந்தது போலாகவும் இருக்கலாம். 

ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி ஆராய்ச்சி செயற்பாட்டுக்காக இரு நாடுகளுக்கு சென்றேன். நான் சென்று ஒன்பது நாட்களின் பின்னரே ICCPR சட்டத்தில் எனக்கு எதிராக விசாரணை நடப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவிக்கிறது.

நான் குற்றமிழைக்காததால் கைது செய்வார்கள் என்று எனக்கு எப்படி தெரியும்? அரசாங்கத்தின் நாடகத்தை நானறியேன்.
சிறைசெல்ல, மரணத்துக்கு, அவமதிப்புக்கு அஞ்சாத என்னை அரசாங்கம் அல்ல வேறு எந்த சக்தியாலும் நிறுத்த முடியாது.

கொலை மிரட்டல்கள்

அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்த எனக்கு எவ்வித பொறுப்பும் இல்லை, ஏனென்றால் நான் மக்களின் பணத்தில் இயங்குபவன் அல்ல. நான் நாடாளுமன்றத்திலும் இல்லை.நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் ஒன்றுமே பேசாத பலர் இருக்கிறார்கள்.

நான் எனக்கான கடமையை தான் செய்கிறேன். என்னை கைது செய்வதென்றால் வாயை மூடிக் கொண்டிருக்கலாம். யாரும் என்னை கேட்கபோவதில்லை.

கொலை மிரட்டல், அவமதிப்பு எமக்கு புதிதல்ல. இன்று கூட சமூக வலைத்தளங்களில் எனக்கு மூன்று கொலை மிரட்டல்கள் இருக்கின்றன” என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version