Home இலங்கை அரசியல் பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன் : சஜித் உறுதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன் : சஜித் உறுதி

0

அரசாங்க மற்றும் தனியாரின் காணிகளை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், தொழிலற்ற இளைஞர்களுக்கும் வழங்கி அவர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்லயில் நேற்று (18) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றப்படும் அவர்களின் பங்களிப்பைத் தேயிலை உற்பத்திக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் தருவதாகக் கூறி, 1,350 ரூபாய் தந்துள்ளனர்.

தேயிலைத் தோட்ட உரிமையாளர்

ஆகவே, எமது ஆட்சியில், தேயிலை பயிரிடப்படாத அரசாங்கம் மற்றும் தனியாரின் காணிகளை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், தொழிலற்ற இளைஞர்களுக்கு வழங்கி அவர்கள் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றப்படுவர்கள்.

ஜனாதிபதி நினைத்தபடி நாட்டில் சுற்றுப்பயணம் செல்கின்றார். அடியாட்களுக்கும் நண்பர்களுக்கும் ஒப்பந்தங்களை வழங்கி இலாபங்கள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

மூன்று வேளையும் உணவு உண்ண முடியாத மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் ஏழ்மையிலிருந்து மக்களை மீட்டெடுக்கின்ற யுகத்தைச் செப்டம்பர் 21 ஆம் திகதி உருவாக்குவேன்“ என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version