Home சினிமா இலக்கியா சீரியல் நடிகர்கள், நடிகைகள் பற்றிய விவரம்.. இதோ

இலக்கியா சீரியல் நடிகர்கள், நடிகைகள் பற்றிய விவரம்.. இதோ

0

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியலில் ஒன்று இலக்கியா. கடந்த அக்டோபர் 10, 2022 அன்று சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற சீரியல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்கள், நடிகைகள் குறித்து விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

ஷாம்பவி குருமூர்த்தி:

சின்னத்திரையில் பிரபலமான மற்றும் தமிழக மக்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் ஷாம்பவி குருமூர்த்தி. இவர் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் மூலம் அறிமுகமாகியுள்ளார். மேலும் சாதனா, கண்மணி ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஷாம்பவி குருமூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 127K followers கொண்டுள்ளார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கிய சிறந்த திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

நந்தன் லோகநாதன்:

வந்தால் ஸ்ரீதேவி சீரியல் மூலம் நடிகராக சின்னத்திரையில் அறிமுகமானவர் நந்தன் லோகநாதன். இவர் சித்தி 2, பூவே உனக்காக, வானத்தை போல, கண்ணான கண்ணே ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் தற்போது இலக்கியா சீரியலில் கவுதம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

காயத்ரி சாஸ்திரி:

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் பிரபலமான நடிகை காயத்ரி சாஸ்திரி. இவர் அஜித் – விஜய் நடிப்பில் வெளிவந்த ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் மாபெரும் அளவில் வெற்றியடைந்த ரோஜா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். மேலும் தற்போது இலக்கியா சீரியலில் கவுதம் அம்மா ரோலில் நடித்து வருகிறார்.

out of focus Youtube சேனல் நெட் ஒர்த்.. முழு தகவல் இதோ

பிரியா பிரின்ஸ்:

தமிழக மக்கள் மத்தியில் பிரபலமான சின்னத்திரை நடிகைகளில் ஒருவர் பிரியா பிரின்ஸ். இவர் தமிழ் கடவுள் முருகன், கண்ணான கண்ணே, வம்சம், வள்ளி, பூவே உனக்காக என பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version