Home இலங்கை அரசியல் சிறீதரனுக்கு எதிரான உள்ளக நகர்வுகள் : முடிவை மறுத்த சுமந்திரன்

சிறீதரனுக்கு எதிரான உள்ளக நகர்வுகள் : முடிவை மறுத்த சுமந்திரன்

0

எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான்.

நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

திகதியை மறுத்த சுமந்திரன்

அடுத்தடுத்த கலந்துரையாடல்கள்

ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.

சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது.

இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம்.

அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது.

மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை.

இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.   

இலங்கைக்குள் நுழைந்த ஈரானிய புலனாய்வு அமைப்புகள்

உலகில் மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளில் இடம்பிடித்துள்ள இலங்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version