யாழ்ப்பாணத்தில் (Jaffna) சட்டவிரோதமாக மாடு கடத்தலில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (25.05.2025) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
அனுமதிப்பத்திரம் இன்றி ஏழு மாடுகளை வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றபோது காரைநகர் பகுதியில் வைத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரனவின் கீழ் இயங்கும் காவல்துறை குழுவிற்கு கிடைத்த தகவலின் அடைப்பைடையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
