வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரியில் (Wayamba National College of Education) இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் குறித்து கல்வி அமைச்சு (Ministry of Education) உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி லால் குமாரவிடம் (Lal Kumara) ஊடகமொன்று வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன் கல்வி அமைச்சு இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இது தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கல்வி அமைச்சு விசாரணை
வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரியில் இரண்டாம் வருட மாணவி ஒருவர் சமீபத்தில் (23.05.2025) தனது விடுதியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
மன அழுத்தம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் மாணவி உயிர் மாய்த்த சம்பவம் குறித்து கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
