Home முக்கியச் செய்திகள் இங்கிலாந்து,கனடாவிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்கவிற்கு வந்த பொதிகள் :அதிகாரிகள் அதிர்ச்சி

இங்கிலாந்து,கனடாவிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்கவிற்கு வந்த பொதிகள் :அதிகாரிகள் அதிர்ச்சி

0

 விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் பொதிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி 08 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்

07 கிலோ ஐஸ் போதைப்பொருள், 1.1 கிலோ குஷ் போதைப்பொருள் மற்றும் 1.1 கிலோ மண்டி என்பன கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களில் உள்ளடங்கும்.

இந்த பொதிகள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலி முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

நீண்ட நாட்களாக இந்த பொதிகளை வாங்க உரிமையாளர்கள் வராததால், அவர்களது முகவரிகளை ஆய்வு செய்தபோது, ​​அவை போலி முகவரி என உறுதியானது.

அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் பெருமளவு போதைப்பொருட்கள் கடிதங்கள் மற்றும் பொதிகள் வாயிலாக அனுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version