Home இலங்கை சமூகம் வவுனியாவில் பாக்குவிற்பனை நிலையங்களால் அதிகரிக்கும் வாகன நெரிசல்

வவுனியாவில் பாக்குவிற்பனை நிலையங்களால் அதிகரிக்கும் வாகன நெரிசல்

0

வவுனியா – பூந்தோட்டம் பிரதான வீதியில் உள்ள பாக்குவிற்பனை செய்யும் கடைகளால்
வாகன நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம்
தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியின்
வயல்வெளி கரையிலும் பூந்தோட்டம் பொதுச்சந்தைக்கு அருகிலும் இவ்வாறான
ஒருவகை பாக்கு விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன. 

குறித்த வியாபார நிலையங்களிற்கு வருகை தரும் இளைஞர்கள் தமது வாகனங்களை பிரதான
வீதிகளை அண்டி நிறுத்துவதால் அந்த பகுதிகளால் பயணம் செய்யும் பொதுமக்கள்
பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை 

பிரதான வீதி மற்றும் சந்தை அமைந்துள்ள பகுதிகளானது அதிகமான வாகனங்கள்
சென்று வருகின்ற ஒரு வீதியாக காணப்படுகின்றது.

இந்நிலையில், அங்கு பாக்கினை
கொள்வனவு செய்யவரும் இளைஞர்களின் செயற்பாடுகளல் வாகனநெரிசல்
ஏற்ப்பட்டு வருவதுடன் அடிக்கடி விபத்து சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது.

எனவே, குறித்த விடயம் தொடர்பாக பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை, அந்த பாக்குவிற்பனை நிலையங்களில் ஒருவகை போதைப்பாக்கு
விற்பனையும் இடம்பெறுவதாகவும் தெரிவித்து கடந்த காலங்களில் வவுனியா பொலிஸாரால்
சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version