Home முக்கியச் செய்திகள் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி யார்…1 கேள்வியெழுப்பும் முன்னாள் எம்.பி

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி யார்…1 கேள்வியெழுப்பும் முன்னாள் எம்.பி

0

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையை பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில சமர்ப்பித்த போதிலும், அந்த அறிக்கையிலும் சூத்திரதாரி யார் என்பது வெளிப்படுத்தப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன(Kavinda Jayawardene) தெரிவித்தார்.

கம்மன்பில(udaya gammanpila) சமர்ப்பித்த அறிக்கையில், தாக்குதலுக்கு திட்டமிட்டவர் யார், மூளையாக செயல்பட்டவர் யார், வெடிக்க பயிற்சி அளித்தவர் யார், அதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியவர் யார் என்பதை வெளிப்படுத்தவில்லை என்றும், இது ஒருவரின் தேர்தல் நலனுக்காக வெளியிடப்பட்ட ஒரு வெளிப்பாடாக தாம் கருதுவதாகவும் அவர் கூறினார்.

தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களை அறிந்து தண்டனை

இந்த அறிக்கையில் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அவர்கள் தாக்குதலை நடத்தியவர்கள் அல்ல எனவும், தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களை அறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதே உண்மையில் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கர்தினால் கேட்டுக் கொண்டதாகவும், தானும் இதை ஆமோதிப்பதாகவும் ஜயவர்தன கூறினார்.

மைத்திரிபால உள்ளிட்ட பலரிடம் இழப்பீட்டு தொகை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena) உட்பட பல முன்னாள் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக காணப்பட்டு இழப்பீட்டுத் தொகையை மீளப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், உண்மையில் அவர்களுக்குத் தேவைப்படுவது இந்தத் தாக்குதலை நடத்திய மற்றும் அவர்களுக்குப் பணிப்புரை வழங்கிய சூத்திரதாரியை கண்டறிவதே எனவும் காவிந்த ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.   

NO COMMENTS

Exit mobile version