Home இலங்கை அரசியல் ஸூம் வசதி இருந்தபோதும் வோசிங்டன் சென்ற அதிகாரிகள்: நாடாளுமன்றில் கேள்வி

ஸூம் வசதி இருந்தபோதும் வோசிங்டன் சென்ற அதிகாரிகள்: நாடாளுமன்றில் கேள்வி

0

சர்வதேச நாணய நிதியம்(IMF), அதன் விரிவாக்கப்பட்ட நிதி வசதி குறித்த விவாதங்களை ஸூம் வசதி மூலம் நடத்த ஒப்புக்கொண்ட போதிலும், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் ஏன் பெரும் தொகையை செலவழித்து வோசிங்டனுக்கு விஜயம் செய்தனர் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதி நிதியமைச்சர் ஹர்சன சூரியப்பெரும,

அரசாங்கத்திற்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வோசிங்டனில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல்களின் சிக்கலான தன்மை

இந்த கலந்துரையாடல்களில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் நான்கு அதிகாரிகளும் மத்திய வங்கியின் ஐந்து அதிகாரிகளும் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலந்துரையாடல்களின் சிக்கலான தன்மை, காரணமாக அரசாங்கம் வோசிங்டன் கலந்துரையாடல்களில் பங்கேற்க முடிவு செய்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், வோசிங்டன் சென்ற தூதுக்குழு விமானக் கட்டணங்களுக்காக 7.05 மில்லியன் ரூபாய்களையும், பயணச் செலவுகளாக 38,587 டொலர்களையும் செலவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தின் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நிதி அமைச்சக அதிகாரிகள் வணிக வகுப்பில் பயணம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துரைத்தார். 

NO COMMENTS

Exit mobile version