Home இலங்கை பொருளாதாரம் சிறப்பான பாதையில் செல்லும் இலங்கை: விரைவில் மூன்றாவது மதிப்பாய்வுக்கு தயாராகும் ஐஎம்எப்

சிறப்பான பாதையில் செல்லும் இலங்கை: விரைவில் மூன்றாவது மதிப்பாய்வுக்கு தயாராகும் ஐஎம்எப்

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கை சில கடின வெற்றிகளுக்கு வழிவகுத்த சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் நீண்ட தூரம் சிறப்பாக பயணித்து விட்டதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், மூன்றாவது மதிப்பாய்வை விரைவில் மேற்கொள்ளமுடியும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஸ்ணா சீனிவாசன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வரி நடவடிக்கைகள்

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது ஒருமித்த கருத்தை எட்டமுடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், கடினமாக வென்ற ஆதாயங்களை புதிய அரசாங்கம் திட்டத்தின் கீழ் பாதுகாக்கவும், கட்டியெழுப்பவும் சர்வதேச நாணய நிதியம் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இலங்கை உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடனும், தனியார் கடன் வழங்குனர்களுடனும் உடன்பாடுகளை எட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது குறிப்பிட்ட வரி நடவடிக்கைகள் குறித்து ஒரு கேள்விகள் உள்ளதாக தெரிவித்த அவர், அது தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதால் அதனை வெளியிடமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version