Home முக்கியச் செய்திகள் ஈரான் தலைநகரில் கேட்கும் பலத்த வெடிச்சத்தங்கள் : தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்

ஈரான் தலைநகரில் கேட்கும் பலத்த வெடிச்சத்தங்கள் : தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்

0

ஈரானின் (Iran) தலைநகர் தெஹ்ரானில் (Tehran) பலத்த வெடிச் சத்தங்கள் கேட்பதாகவும் மற்றும் ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் (Israel) ஆரம்பித்துள்ளதாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ் வெடிச் சத்தங்கள் சனிக்கிழமை அதிகாலை முதல் கேட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், ஈரான் தலைநகரில் புகைமூட்டங்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்புச் சத்தம்

அத்தோடு, டமாஸ்கஸ் (Damascus) கிராமப்புறங்களிலும் மற்றும் மத்தியப் பகுதியிலும் குறித்த குண்டுவெடிப்புச் சத்தம் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை.

இஸ்ரேல் இராணுவம்

இஸ்ரேல் (Israel) இராணுவம் தாக்குதல் நடத்தினால் அந்த தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக ஈரான் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், இஸ்ரேலுடனான போரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு ஈரான் இராணுவத்திற்கு அந்நாட்டின் உயர் தலைவர் அயட்டோலா அலி காமேனி (Ali Khamenei) அறிவுறுத்தியிருந்தார்.

மேலும், இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலால் ஈரானில் பெரிய அளவிலான சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டால் பதிலுக்கு ஈரான் இராணுவம் மிகப்பெரிய அளவில் பதில் தாக்குதல் நடத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version