Home இலங்கை அரசியல் நாட்டை நிர்வகிக்கும் ஐஎம்எப்! ஜனாதிபதி மற்றும் மக்களின் தியாகங்களை எடுத்துக் கூறும் அரசாங்கம்

நாட்டை நிர்வகிக்கும் ஐஎம்எப்! ஜனாதிபதி மற்றும் மக்களின் தியாகங்களை எடுத்துக் கூறும் அரசாங்கம்

0

2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து 2024ஆம் ஆண்டு வரைக்கும் பயணித்த போது ஜனாதிபதி, மக்கள் மற்றும் அரசாங்கம் நிறைய தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது என்று நாங்கள் நம்புகிறோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடி 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியமே இன்று நாட்டை நிர்வகிக்கின்றது என்பது எதிர்க்கட்சி அரசாங்கத்தின் மீது சுமத்திய குற்றச்சாட்டாகும். 2022ஆம் ஆண்டு மார்ச்சில்தான் நாம் நாடு என்ற வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைக் கோரினோம்.

இந்த பேச்சுவார்த்தைகள் 2022 ஏப்ரல் மாதத்திலிருந்து ஆரம்பமாகி தேவையான சீர்திருத்தத் திட்டங்கள் குறித்து பேசப்பட்டது.

முக்கியமாக இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து 2024ஆம் ஆண்டு வரைக்கும் பயணித்த போது ஜனாதிபதி, மக்கள் மற்றும் அரசாங்கம் நிறைய தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த மறுசீரமைப்பு செயல்முறைகள் குறுகிய காலத்திற்கு கடினமாக இருந்தாலும் நடுத்தர மற்றும் நீண்டகால அளவில் நல்ல பலனைத் தரும் என்று நாங்கள் அப்போது தெளிவாகக் கூறினோம்.

கடினமான காலம் முடிவடைந்து இப்போது பிரதிபலன்களை பெறும் நிலையை அடைந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version