சர்வதேச நாணய நிதியத்தின்(imf) விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு (sri lanka)வழங்க வேண்டிய 4வது கடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படும் என உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4வது கடன் தவணையாக இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 330 மில்லியன் அமெரிக்க (us)டொலர்களை பெறவுள்ளது.
996 மில்.அமெரிக்க டொலர்களை பெற்ற இலங்கை
இதற்கு முன்னர் இலங்கை கடந்த அரசாங்கத்தின் கீழ் 3 தவணைகளுக்கு 996 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளது.
இந்த கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள மொத்த கடன் தொகை 2900 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐஎம்எவ் பிரதிநிதிகள்
இந்த வருடத்தின் கடந்த 6 மாத கால பொருளாதார நிலைமையின் முதற்கட்ட ஆய்வுக்கு பின் இந்த ஆண்டு கடன் தொகை விடுவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த வருடம் அரசாங்கம் முன்வைக்கவுள்ள இடைக்கால நியமக் கணக்கை தயாரிப்பதற்கு முன்னதாக அடுத்த வருடத்திற்கான கடன் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.