Home இலங்கை அரசியல் டோக் குரங்கு பயங்கரவாதம்: விவசாயிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

டோக் குரங்கு பயங்கரவாதம்: விவசாயிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

0

விவசாயிகளுக்கு தங்கள் பயிர்ச்செய்கை நிலங்களில் வன விலங்குகளால் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த (K. D. Lalkantha) அறிவித்துள்ளார்.

காட்டு விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவது, குறிப்பாக டோக் குரங்குகளால் சேதப்படுத்தப்படுவது ஒரு தீவிரமான பிரச்சினையாக உள்ளதால் அதனை சிலர் “டோக் குரங்கு பயங்கரவாதம்” என்றும் அழைப்பதாகவும் அவர் நாடாளுமன்றில் கூறியுள்ளார்.

அத்தோடு, வன விலங்குகளால் ஏற்படும் சேதங்கள் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பிரச்சினையாக இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு 

இதன்படி, விவசாயிகள் தங்கள் பயிரிடப்பட்ட நிலத்தில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என்றும் அதற்கு எந்த சட்ட சிக்கல்களும் இல்லை அமைச்சர் அறிவித்துள்ளார்.

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பை விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், நீண்ட காலம் செல்வதற்கு முன்னரே அது தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version