மகிந்த ராஜபக்ச ஆட்சி செய்த 2004 மற்றும் 2005 இடைப்பட்ட காலங்களில் சட்டவாட்சி பலவீனமாக இருந்ததன் காரணமாக 40 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யயப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த படுகொலைகள் தொடர்பான குற்றாவளிகள் இன்னும் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில், “நாற்பதுக்கும் மேலான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அழிப்பதற்காக என எமது சிரேஷ்ட தலைவர் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை செய்யப்பட்டார், அத்தோடு மாமனிதன் என போற்றக்கூடிய ரவிராஜ் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார், மேலும் அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு படுகொலை செய்யப்பட்டார்.
எனினும், குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கபடவில்லை இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா என்கின்ற கேள்வி காணப்பட்டது.
சுருக்கமாக சொல்ல போனால் பண நாயகம் நாட்டை ஆட்சி செய்தது வீதிகள் எல்லாம் பிணங்கள் குவிந்து காணப்பட்டது.
பாரிய குற்றங்களை இளைத்து விட்டு கௌரவர்களாக உலாவி வந்த அந்த குற்றவாளிகள், இந்த ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்த பட வேண்டும்.
அவர்களுக்கு முறையான தண்டனைகள் வழங்கபடுவதன் மூலமாக சட்டவாட்சியை பலப்படுத்த வேண்டும்.”
மேலும் அவர் கூறியவை கீழுள்ள காணொயில்….
https://www.youtube.com/embed/UVITvP9Ua3w