Home இலங்கை பொருளாதாரம் மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) ஏல விற்பனை குறித்து முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

290,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகள், எதிர்வரும் 18ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, 2028ஆம் ஆண்டு முதிர்வுக் காலத்தைக் கொண்ட 100,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளன. 

ஏலத்தில் விடப்படவுள்ள பிணைமுறிகள்

அத்துடன் 2029ஆம் ஆண்டு முதிர்வுக் காலத்தைக் கொண்ட 150,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகள் ஏலத்தில் விடப்படவுள்ளன.

இதேவேளை 2034 ஆம் ஆண்டு முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகளும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/important-announcement-issued-by-central-bank-sl-1726112388

NO COMMENTS

Exit mobile version