Home இலங்கை அரசியல் தூசுதட்டப்படவுள்ள முக்கிய வழக்குகள்! விசாரணை களத்தில் ஷானி அபேசேகர

தூசுதட்டப்படவுள்ள முக்கிய வழக்குகள்! விசாரணை களத்தில் ஷானி அபேசேகர

0

ஊடகவியளாலர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணையை, ஷானி அபேசேகர உள்ளிட்ட புலனாய்வாளர்கள் குழுவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, லசந்தவின் கொலை உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கொலைகள் தொடர்பான விசாரணைகள், பல்வேறு காரணங்களால் குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணைகளிலிருந்து நீக்கப்பட்ட விசாரணை அதிகாரிகளின் கீழ் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ரக்பி வீரர் வசிம் தாஜுதீன் கொலை, கொழும்பை சுற்றியுள்ள 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனமை, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை, பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு போன்ற விசாரணைகள் ஷானி அபேசேகரவின் மேற்பார்வையின் கீழ் நடந்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஷானி அபேசேகர

இதன்படி முந்தைய அரசாங்கம் ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகளை விசாரணையிலிருந்து நீக்கி விசாரணை தொடராமல் தடுக்க நடவடிக்கை எடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் விசாரணையைத் தொடர இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version