வடக்கில் பொதுமக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதாக நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) ஒரு தோற்றப்பாட்டை வகுத்திருந்தாலும், அங்கு பெரும்பாலான சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள்
வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போதே இதனை கூறியுள்ளார்.
“’ போர் சூழலில் எமது மக்கள் காணிக்கனா உரிமைகளை இழந்த நிலையில், தற்போது குத்தகைதாரர்களாக மாற்றப்படுவதினை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதற்கு அரசாங்கம் விரைவில் தீர்வை பெற்றுக்கொடுத்து மக்களுக்கு சொந்தமான காணிகளை வழங்கவேண்டும்” என கஜேந்திரன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,