Home முக்கியச் செய்திகள் ரொனால்டோவை ‘தல’ என கௌரவித்துள்ள பிஃபா: கொண்டாடும் தோனி ரசிகர்கள்

ரொனால்டோவை ‘தல’ என கௌரவித்துள்ள பிஃபா: கொண்டாடும் தோனி ரசிகர்கள்

0

உலக புகழ்பெற்ற பிஃபா உலகக் கோப்பையின் (FIFA) அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் thala for a reason என்ற வசனத்துடன் ரொனால்டோ(Ronaldo) புகைப்படத்தை வைத்து பதிவிட்டுள்ளமையானது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ள தோனி(Dhoni)   தல என கொண்டாடப்படுகின்றார்.

மேலும் ரசிகர்கள் thala for a reason வாசகத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவர்.

கொண்டாடும் ரசிகர்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், டோனியின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த தல என்ற வார்த்தை கால்பந்து உலகக் கோப்பையிலும் தடம் பதித்துள்ளது.

உலக புகழ்பெற்ற FIFA-ன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் thala for a reason என ரொனால்டோ புகைப்படத்தை வைத்து பதிவிட்டுள்ளது.

கிரிக்கெட் ஜாம்பவான் தோனியையும் பெருமை சேர்க்கும் விதமாக ஃபிபா உலகக் கோப்பை ‘தல’ என்ற இந்த பதிவை வெளியிட்டுள்ளது.

ரொனால்டோவின் புகைப்படம்

கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகின் தலைச்சிறந்த ஜாம்பவான்.
அவருக்கும் உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான இரசிகர்கள் உள்ளனர்.

ஃபிபா உலகக் கோப்பை பக்கத்தில் இருந்து பதிவிடப்பட்ட ரொனால்டோவின் புகைப்படத்துடனான இந்த பதிவிற்கு தோனி ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகின்றனர்.

மேலும், கமெண்டில் ரொனால்டோவில் உடை எண்ணும் 7, தோனியின் உடை எண்ணும் 7 எனவே இருவரும் எங்களுக்கு தலதான் என்று பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version