Home இந்தியா சிதைக்கப்பட்ட பா.ஜ.கவின் அரசியல் நகர்வு: ஸ்டாலின் வகுக்கும் புதிய திட்டம்

சிதைக்கப்பட்ட பா.ஜ.கவின் அரசியல் நகர்வு: ஸ்டாலின் வகுக்கும் புதிய திட்டம்

0

தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு (N. Chandrababu Naidu) நாயுடுவை தி.மு.கவின தலைவரும் தமிழக முதலமைச்சருமான எம். கே. ஸ்டாலின் (M. K. Stalin) சந்தித்துள்ளமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

குறித்த சந்திப்பு தொடர்பான பதிவு முதலமைச்சர் எம். கே ஸ்டாலின் தனது எக்ஸ் (x) கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் தனி பெரும்பான்மை கிடைக்காததால், தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் என்பவற்றின் ஆதரவுடன் 3ஆவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

வெற்றியின் பின்னர் இலங்கை தொடர்பில் மோடி வெளியிட்ட கருத்து

நாயுடு – ஸ்டாலின் சந்திப்பு

இதன்படி, மத்தியில் பாஜக ஆட்சியமைப்பதற்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் 16 தொகுதிகளில் பெரும்பான்மையில் உள்ள தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை தமிழக முதலமைச்சர் எம். கே ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டெல்லி விமான நிலையத்தில், வைத்து சந்திரபாபு நாயுடுவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தேன்.

ஒத்துழைப்பு

சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன்.

அவர் மத்திய அரசில் முக்கிய பங்காற்றுவார்.

தென் மாநிலங்களுக்காக வாதிடுவார். நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சர் எம். கே ஸ்டாலின் சந்தித்திருப்பது மோடி தரப்பிற்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.   

கனடாவில் வீடு விற்பனை: முக்கிய நகரமொன்றின் தற்போதைய நிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version