Home முக்கியச் செய்திகள் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்ட முக்கிய தகவல்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்ட முக்கிய தகவல்

0

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிநபர் அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, தனிநபர் அடையாள எண்ணின் (PIN) செலலுபடியாகும் காலமானது, நவம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

செல்லுபடியாகும் நீடிப்பு

வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட எண்களுக்கு இந்த நீடிப்பு செல்லுபடியாகும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிநபர் வருமான வரி, கூட்டாண்மை வருமான வரி மற்றும் பெருநிறுவன வருமான வரி தொடர்பான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு PIN குறியீட்டின் நீட்டிப்பு பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version