Home இலங்கை அரசியல் பெருந்தோட்டங்களை கிராமமாக மாற்றுவது தொடர்பாக பிழையான தகவல்கள் : வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்டங்களை கிராமமாக மாற்றுவது தொடர்பாக பிழையான தகவல்கள் : வடிவேல் சுரேஷ்

0

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகி இருப்பதோடு அதில் எமது எதிர்பார்ப்புக்கள் எழுத்துமூலமாக பிரதிபலித்திருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்ப ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ”அண்மையில் அமைச்சரவை மூலமாக தீர்மானிக்கப்பட்டிருந்த பெருந்தோட்டத்தை கிராமமாக மாற்றுவது சம்மந்தமாக பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது.

அதை நாங்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்ததோடு இது தொடர்பாக ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தை நடாத்தினோம்.

அதற்கமைய ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனத்திலே மிகத் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது அதாவது லயன் குடியிருப்புக்களுக்கு பதிலாக அனைத்து வசதிகளும் கொண்ட தனி வீட்டு கிராமத்தை உருவாக்குவது என்றாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்..    

NO COMMENTS

Exit mobile version