Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் இருந்து குடும்ப பெண் கடத்தல்: வானுடன் 4 பேர் கைது

தமிழர் பகுதியில் இருந்து குடும்ப பெண் கடத்தல்: வானுடன் 4 பேர் கைது

0

வவுனியாவில் இருந்து குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டதுடன் வானுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா (Vavuniya)  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் , வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவரை யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து வான் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த பெண்ணின் மாமியார் பெண்ணை தூக்கிச் சென்றவர்களை விரட்டிய போது அவரை உதைந்து விட்டு சென்றுள்ளனர்.

காவல்துறை குற்றத்தடுப்பு

இதன்பின் மாமியார் வவுனியா தலைமைப் காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, தலைமைப் காவல்துறை பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஹேமந்த தலைமையிலான குழுவினர் விரைந்து செயற்பட குறித்த வாகனம் சென்ற பாதையை பின் தொடாந்து சென்ற போது வாகனத்தை பளைப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளதுடன், குறித்த பெண்ணையும் மீட்டுள்ளனர்.

இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்த வாகனம் காவல்துறையினரால் மீட்கப்பட்டதுடன், நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணியந்தோட்டம், இருபாலை, சுன்னாகம் (Chunnakam) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/kidnapping-of-family-girl-from-vavuniya-1724981980

NO COMMENTS

Exit mobile version