Home இலங்கை சமூகம் வவுனியா வைத்தியசாலையில் பிறந்த சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

வவுனியா வைத்தியசாலையில் பிறந்த சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

0

வவுனியா (Vavuniya) மாவட்ட பொது வைத்தியசாலையில் பிறந்த சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி வைத்தியசாலை
முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிசுவின் உறவினர்கள் மற்றும் பொது மக்களால் இன்று (21.08.2024) மாலை
குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சரியான நேரத்துக்கு சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. 

இந்நிலையில், குறித்த சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி வைத்தியசாலையின் முன்பாக வீதியில் அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,
வவுனியா வைத்தியசாலையின்  வைத்தியர்களின் அசமந்தத்தால் மரணித்த சிசுவிற்கு நீதி
வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

முன்னெடுக்கப்படும் விசாரணைகள் 

அத்துடன், “வைத்தியசாலையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை. சுகாதார
அமைச்சர் ரமேஸ் பத்திரன, இது தொடர்பில் கவனம் செலுத்தி ஒரு விசாரணை குழுவை
அமைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும்.

தொடரும் மருத்துவ மாபியாக்களின் அசமந்த போக்கிற்கு தீர்வு காண அனைவரும்
ஒன்றிணைய வேண்டும்” எனவும் அவர்கள் குறுிப்பிட்டுள்ளனர்.

மேலும், வவுனியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சட்டவைத்திய அதிகாரியின்
விசாரணையில் நம்பிக்கை இல்லை.”சிசுவின் சடலத்தை பார்வையிட்ட வவுனியா
நீதிபதி விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.

அவரை நாம் நம்புகின்றோம். நீதிபதி அம்மா எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்” எனவும் இதன்போது
மரணித்த சிசுவின் உறவினர்கள் கோரியுள்ளனர். 

குறித்த போராட்டம் காரணமாக வைத்தியசாலயின் பிரதான வாயில் அருகில் பொலிஸார்
குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version