Home இலங்கை பொருளாதாரம் கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) இன்று (21) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி, அனைத்து பங்கு பங்கு விலைச் சுட்டெண் 16,500 புள்ளிகளைத் தாண்டியதுடன் S&P SL20 பங்கு விலைச் சுட்டெண் முதல் முறையாக 5,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.

நாள் முழுவதும் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 224.01 புள்ளிகள் உயர்ந்து 16,597.16 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

மொத்த புரள்வு

இதேவேளை, S&P SL20 விலைச் சுட்டெண் 94.71 புள்ளிகள் உயர்ந்து 5,056.74 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 8.31 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version