Home இலங்கை அரசியல் கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 36 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட 19 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு அரசியல் கட்சியும் 16 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியவர்களில் அடங்குவர்.

ஜனாதிபதி தேர்தல் 

வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் நாளை (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/increase-in-the-number-of-payers-1723560866

NO COMMENTS

Exit mobile version