Home உலகம் பிரச்சினைக்குள்ளாகும் மாலைதீவு: உதவிக்கரம் நீட்டும் இந்தியா

பிரச்சினைக்குள்ளாகும் மாலைதீவு: உதவிக்கரம் நீட்டும் இந்தியா

0

இந்திய அரசானது, குடிநீர் மற்றும் கழிவு மேலாண்மையில் மாலைதீவு(Maldives) நாட்டிற்கு உதவியளிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும்(India) மாலைதீவுக்கும் இடையில் அண்மைய சில காலமாக விரிசல் ஏற்பட்டு வந்தது.

இதனால் சுற்றுலா துறை பெரிதும் பாதிப்படைந்து பொருளாதார ரீதியாக பெரும் விளைவுகளை மாலைதீவு எதிர்நோக்கியுள்ளது.

இந்நிலையில் மாலைதீவின் 28 தீவுகளில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றும் திட்டங்களுக்கு இந்திய அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

குடிநீர் பஞ்சம் 

இதையடுத்து இந்திய அரசுக்கு மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu) நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ல் மாலைதீவு குடிநீர் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தின் போது கடுமையான குடிநீர் பஞ்சம் நாட்டில் ஏற்பட்டது.

அப்போது மாலைதீவின் கோரிக்கைக்கிணங்க பல தவணைகளாக இந்தியா மாலைதீவுக்கு குடிநீர் அனுப்பியது.

மேலும் அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாலைததீவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version