அமெரிக்காவின் (United States) முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) தேர்தல் பிரசாரம் ஊடுருவல் (ஹேக்) செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2024 இல் அமெரிக்க பிரசாரத்தில் தலையிட வெளிநாட்டு முகவர்களின் முயற்சிகளை விபரிக்கும் அறிக்கையை மைக்ரோசாப்ட் வெளியிட்ட ஒரு நாளுக்குப் பின்னர் இந்த குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
ட்ரம்பின் முன்னாள் மூத்த ஆலோசகரின் மின்னஞ்சல் கணக்கிலிருந்து ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் உயர் அதிகாரிக்கு, கடந்த ஜூன் மாதம் ஈரானிய இராணுவ புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை ஒன்றை அனுப்பிய ஒரு உதாரணம், இந்த குற்றச்சாட்டுக்கு மேற்கோளிடப்பட்டுள்ளது.
குறித்த இந்த குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் பிரதிநிதிகள் மறுத்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டு ட்ரோன் தாக்குதலில் முக்கியப் புரட்சிக் காவலர் ஜெனரல் காசிம் சுலைமானியைக் கொன்ற ட்ரம்ப் மீது பதிலடி கொடுக்கவுள்ளதாக தெஹ்ரான் நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் ட்ரம்ப் உட்பட அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக படுகொலை முயற்சிகளை சதி செய்ததாக, ஈரானுடன் உறவு கொண்ட பாகிஸ்தானியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.