Home உலகம் கனடாவில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

கனடாவில் (Canada) தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் புதிய சீர்த்திருந்தங்களை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, கனேடிய அரசாங்கம் விவசாயம், மீன் மற்றும் கடல் உணவு பதப்படுத்தப்படும் துறைகளில் தொழிலாளர் குறைப்பாட்டை சரி செய்ய புதிய தொழிலாளர் நெறிமுறைகளை உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது கனடாவில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் நிகழும் மோசடி மற்றும் தவறான பயன்பாட்டை தடுக்க உதவும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

பணியிடங்கள்

இதனால், குறித்த துறைகளில் நேர்மையை மேம்படுத்தி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தொழிலாளர்கள் குறைவான சம்பளத்தில் 20% தாண்டக்கூடாது என்ற விதியை கடுமையாக பின்பற்றவும், கட்டணங்களை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் வேலை தரும் முதலாளிகளின் தகுதிகளை தீவிரமாக பரிசீலிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைியில்,குறித்த திட்டம், கனடாவில் உள்ள பணியிடங்களை நிரப்ப வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை தற்காலிகமாக நியமிப்பதற்கான வழிமுறை என குறிப்பிடப்படுகிறது. 

 

NO COMMENTS

Exit mobile version