Home இலங்கை அரசியல் தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தின் பின்னால் இந்தியா! தீவிர கண்காணிப்பில் சர்வதேசம்

தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தின் பின்னால் இந்தியா! தீவிர கண்காணிப்பில் சர்வதேசம்

0

தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தின் பின்னால் இந்தியா (India) இருப்பதாக கூறப்படுகின்றது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தெரிவித்த அவர், “அவசர அவசரமாக எடுத்த முடிவின் பின்னால் பெரும் அழுத்தம் உள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) ஆதரவு வழங்குவதாக கடந்த 01.09.2024 அன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்திருந்தது.

எனினும் குறித்த தீர்மானம் எடுக்கப்படும் வரை இது குறித்து சஜித் தரப்பிற்கு எந்தவொரு அறிவித்தலும் வழங்கப்படவில்லை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குலகத்தை பொறுத்தவரையில் இலங்கையை கட்டுப்படுத்துவது இலகுவான விடயமாகவே உள்ளது.

மேலும், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் மேற்குலக நாடுகள் அமைதியாக செயற்படுவது போன்று தோற்றத்தை வெளிப்படுத்தினாலும் தேர்தல் தொடர்பிலான முழுமையான திட்டத்தை மேற்குலக நாடுகள் படிப்படியாக நகர்த்திக்கொண்டுதான் உள்ளன” என குறிப்பிட்டார்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் தொடர்பில் சர்வதேசத்தின் முழுமையான கண்காணிப்பினை அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி…

https://www.youtube.com/embed/dtoQ58YGIRQ

NO COMMENTS

Exit mobile version