இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் இருந்து வந்த பதற்றமான சூழல் ஒரு அமைதியான நிலையை அடைந்திருக்கும் நிலையில்
இந்த அமைதி நிலையை ஏற்படுத்தியது யார் என்ற விடயம் மிகப்பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
அமெரிக்கா தான்தான் இந்த அமைதி நிலையை ஏற்படுத்தியது என்று கூறிக்கொண்டிருக்க இந்தியாவோ இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.
ஏன் என்றால் இந்தியாவை பொறுத்தவரை தனது உள் விவகாரங்களில் மூன்றாம் தரப்பு தலையீட்டை ஏற்றுக்கொள்ள கூடாது என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருக்கின்றது.
ஏன் இந்தியா மூன்றாம் தரப்பை அனுமதிப்பதில்லை?
இந்த விவகாரத்தில் இவ்வளவு இறுக்கமாக நின்று அமெரிக்காவையே எதிர்க்கவேண்டிய தேவை இந்தியாவுக்கு என்ன?
அப்படி மூன்றாம் தரப்பு தலையிட்டால் மீண்டும் காஸ்மீர் விவகாரம் ஒரு பேசு பொருளாக மாறி
இந்தியா தொடர்பிலும் காஸ்மீர் தொடர்பிலும் சில கசப்பான உண்மைகள் வெளிவரக்கூடும் என்பதா?
எனவேதான் ஏன் இந்தியா மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தத்தை ஏற்க மறுக்கிறது என ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு…
https://www.youtube.com/embed/SRg04ut8SMs
