Home இந்தியா இந்திய மக்களவை தேர்தல்! வாக்கு பதிவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இந்திய மக்களவை தேர்தல்! வாக்கு பதிவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

0

தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று நடைபெற்ற தேர்தலில், இரவு 7 மணி வரை 72.09 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். 

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 வீத வாக்குகளும் மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தின் 39 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியது.

100 வீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டு தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

வாக்கு வீதம்

இந்த நிலையில், வாக்குப்பதிவு தொடர்பில் கருத்து வெளியிட்ட சத்யபிரத சாஹு, “தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

இலங்கைக்கான விசா! நிராகரிக்கப்படும் போலி செய்திகள்

விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை வீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்த வாக்கு வீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே.

துல்லியமான வாக்குப்பதிவு

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, இரவு 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 வீத வாக்குகள் மட்டும் பதிவாகி இருந்தது.

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்கள்! சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்

அத்துடன், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது.

பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர்.

அத்துடன், 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக் கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு வீதம் வெளியாகும்” என தெரிவித்துள்ளார். 

வெளியான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை பெறுபேறுகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version