இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் போர் மூண்டால் இலங்கை கேந்திர முக்கியத்துவம் பெறும் நாடாக மாற வாய்ப்புள்ளது.
எனினும், இலங்கை போன்ற ஒரு நாட்டால் எந்த தரப்புக்கும் ஆதரவளிக்க முடியாது என பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானின் நட்பு நாடாக சீனா உள்ளது.
இலங்கை இந்தியாவின் அயல் நாடாக இருந்தபோதிலும் சீனா இலங்கையின் நண்பராக உள்ளது.
அத்துடன், போர் காலத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு இராணுவ உதவிகளையும் வழங்கியுள்ளன.
இதனால், இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தில் இலங்கை எந்த நாட்டின் சார்பிலும் நிற்க முடியாது.
இவை தொடர்பில் முழுமையாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
