Home இலங்கை கல்வி தென் மாகாண பாடசாலைகளுக்கு உதவிகளை வழங்கியுள்ள இந்தியா

தென் மாகாண பாடசாலைகளுக்கு உதவிகளை வழங்கியுள்ள இந்தியா

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் பயன்பாட்டிற்காக டிஜிட்டல் கருவிகளை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.

இது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க( Ranil Wickremesinghe) மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா ஆகியோர் கலந்து கொண்ட வைபவம் நேற்று(06) காலியில் நடைபெற்றுள்ளது.

பேச்சுவார்த்தைகள்

இதன்போது நவீன தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதற்கு அண்டை நாடான இந்தியா வழங்கிய ஆதரவை தாம் வரவேற்பதாக இலங்கையின் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்

இலங்கையில் இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவுடனான எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னேறி வருகின்றன என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்

நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, இந்தியாவின் அண்டை நாடாக, இலங்கைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவை வழங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

எனவே இலங்கைக்கு அத்தியாவசியமான உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அறிவு ஆதரவை வழங்குவதில் இந்தியா உறுதியுடன் உள்ளது என்றும் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version