Home இந்தியா வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்தும் மோடி தலைமையிலான அரசின் புதிய வரவு செலவு திட்டம்

வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்தும் மோடி தலைமையிலான அரசின் புதிய வரவு செலவு திட்டம்

0

இந்தியாவின் (India) புதிய வரவு செலவு திட்டத்திற்கு முறைப்படி பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன் படி, இந்தியாவின் நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு நாடாளுமன்றில் தாக்கல் செய்தார்.

மோடி தலைமையிலான அரசு 

இந்த நிலையில், தொடர்ந்து 7-வது முறையாக வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்த நபர் என்ற பெருமையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் வரவு செலவு திட்டத்தின் முன்னுரையை வாசிக்க தொடங்கினார்.

அதில், மூன்றாம் முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து வரலாறு படைத்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்ததோடு. அரசின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா பணவீக்கம் 

அத்துடன், சர்வதேசப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவு சூழலிலும் இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மத்திய வரவு செலவு திட்டம், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் 4 இலக்குகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.    

https://www.youtube.com/embed/sB12FtRQdCg

NO COMMENTS

Exit mobile version