Home இலங்கை அரசியல் புதிய ஜனாதிபதி தெரிவில் வேகமெடுக்கும் இந்தியாவின் இரகசிய நகர்வு

புதிய ஜனாதிபதி தெரிவில் வேகமெடுக்கும் இந்தியாவின் இரகசிய நகர்வு

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று வவுனியாவில் கூடி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவளிப்பது என தீர்மானித்திருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் நடாத்தப்பட்ட குறித்த கூட்டத்திற்கு செல்லாத உறுப்பினர்களை இந்தியத் தூதரகம் தொடர்பு கொண்டு இந்த முடிவுக்கு கட்டுப்படுமாறு அறிவுறுத்தியுள்ளதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.

இதற்கமைய, சுமந்திரனால் மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவை இந்தியா ஆதரிக்கின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை இந்தியா தீர்மானித்துள்ளதுடன் அதற்கான காய் நகர்த்தல்களையும் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் இந்தியாவிற்கு எதிரான களமொன்றும் இலங்கையில் உருவாகவிருப்பதாக கூறப்படுகின்றது.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version