Home இலங்கை பொருளாதாரம் இந்தியாவும் இலங்கையும் தேசிய நாணயங்களில் வர்த்தகம் செய்ய முயற்சி

இந்தியாவும் இலங்கையும் தேசிய நாணயங்களில் வர்த்தகம் செய்ய முயற்சி

0

Courtesy: Sivaa Mayuri

இந்தியாவும் இலங்கையும் தேசிய நாணயங்களில் வர்த்தகம் செய்ய முயற்சித்து வருவதாக, இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இரு தரப்பும் நிதி இணைப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் இது ஒரு வளர்ச்சியாகும் என்று அவர் இந்திய ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு 

இதன்படி, பொருட்களுக்கு உள்ளூர் நாணயத்தில் பணம் செலுத்தப்படவுள்ளது.

எனவே இது மிகவும் அர்த்தமுள்ள நல்ல திட்டம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், இந்திய சுற்றுலாப் பயணிகள் வருவதும் மிகவும் எளிதாக இருக்கும், அவர்கள் இலங்கைக்கு வந்து இந்திய ரூபாயில் பணம் செலுத்துவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு உச்சத்தில் உள்ளது எனவும் இருதரப்பு உறவுகள் மிகவும் சிறப்பாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போதைய பொருளாதார நிலையில் இன்னும் இலங்கை நெருக்கடியை விட்டு வெளியேறவில்லை என்பதுடன்  இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. 

கடன் மறுசீரமைப்பு இருதரப்புப் பணிகளை முடித்துவிட்டதோடு, பத்திரப்பதிவுதாரர்களுடனும் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும், புதிய வருவாய் வழிகளை உருவாக்குவதற்கான புதிய வழிகளையும், அதில் இந்தியாவின் பங்கையும் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இந்தியாவுடனான தொடர்பை பெரிய அளவில் பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version