Home இலங்கை அரசியல் இலங்கையை அடிமைப்படுத்தும் இந்தியாவின் எண்ணம்! அநுரவின் செயற்பாட்டை விமர்சிக்கும் விமல்

இலங்கையை அடிமைப்படுத்தும் இந்தியாவின் எண்ணம்! அநுரவின் செயற்பாட்டை விமர்சிக்கும் விமல்

0

எட்கா உடன்படிக்கை மூலம் இந்தியா எதிர்வரும் காலங்களில் இலங்கையை அடிமைப்படுத்திவிடும் என்று விமல் வீரவன்ச(Wimal Weerawansa) எச்சரித்துள்ளார்.

நேற்றைய தினம் (18) மாலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் சொற்கேட்டு ஆடும் கைப்பாவை

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) இந்திய விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கான எட்கா உடன்படிக்கை தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

லிபரல் ஜனநாயகவாதியான ரணில் விக்ரமசிங்க அவ்வாறான ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் அது குறித்து ஆச்சரியப்பட நேர்ந்திருக்காது.

ஆனால் இந்திய வல்லாதிக்கம் குறித்து ஏராளமாக எச்சரித்துள்ள ரோஹண விஜேவீர உருவாக்கிய கட்சியின் தலைவர்களில் ஒருவர் அவ்வாறு செய்வது அடிமைத்தனத்தை வெளிப்படுத்துகின்றது.

குறித்த உடன்படிக்கை மூலம் அரசியல், கலாசாரம், எரிசக்தி மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியாவின் சொற்கேட்டு ஆடும் கைப்பாவையாக இலங்கையை மாற்றிக் கொள்வதே இந்தியாவின் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version