அமரன்
2024ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று அமரன். தளபதி விஜய்யின் கோட் திரைப்படத்திற்கு பின் அதிக வசூல் செய்த தமிழ் படமாகவும் அமரன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் ஆக மாறியுள்ள அமரன் படம் உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.
பலரும் பார்த்திராத புகைப்படம்
சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இருவருமே விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்தவர்கள் என்பதை நாம் அறிவோம். விஜய் டிவியின் சொத்து என சொன்னால் அதில் கண்டிப்பாக தொகுப்பாளினி திவ்யதர்ஷினியும் இருப்பார்.
12 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ள சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி… அவரே சொன்ன விஷயம்
காப்பி வித் டிடி எனும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினி டிடி, அமரன் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனருடன் விஜய் டிவியில் பணிபுரிந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..