Home இலங்கை அரசியல் நேர்மையான அரசியலை முன்னெடுக்க அஷ்ரபின் சமாதியில் உறுதிமொழி எடுத்த எம்.பிக்கள்

நேர்மையான அரசியலை முன்னெடுக்க அஷ்ரபின் சமாதியில் உறுதிமொழி எடுத்த எம்.பிக்கள்

0

நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஊடாக சமூகத்தின் அரசியல் உரிமைகளைப் பெற்றெடுப்பதற்கான நேர்மையான அரசியலை முன்னெடுக்க முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம். எச்.எம். அஷ்ரப்பின் அடக்கத்தலத்தில் இந்த உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நேற்று(18) நடைபெற்றுள்ளது.

விசேட பிரார்த்தனை

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் 10ஆவது நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்கள் நேற்று(18) காலை ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் மறைந்த அஷ்ரப்பின் மண்ணறை அருகே ஒன்றுகூடி விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் சமூகத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான நேர்மையான அரசியலை முன்னெடுப்பதற்கும் உறுதிபூண்டுள்ளனர்.

இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாருஸ் ஸலாம் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version