Home இலங்கை சமூகம் நாகப்பட்டினம்-காங்கேசன்துறை கப்பல் சேவைகள் மீண்டும் ஆரம்பம்: வெளியானது அறிவிப்பு

நாகப்பட்டினம்-காங்கேசன்துறை கப்பல் சேவைகள் மீண்டும் ஆரம்பம்: வெளியானது அறிவிப்பு

0

தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது.

வாகன இறக்குமதியை ஆரம்பித்த டொயோட்டா நிறுவனம்: ஆரம்ப விலை இதுதான்

நாகையிலிருந்து காங்கேசன்துறைக்கு 

மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவைகள் நாகையிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் இலவச வைஃபையை வழங்கும் நாடு எது தெரியுமா…!

இரு வழிப் பயணம்

இரு வழிப் பயணத்துக்காக அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படவுள்ளதுடன் ஒவ்வொரு பயணியும் தம்முடன் 20 கிலோ வீதம் 3 பொதிகளை எடுத்துச் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கப்பலின் நுழைவுச்சீட்டு விற்பனை முகவர் நிலையம் யாழ் மருத்துவமனை வீதியில் அமையவுள்ளதுடன், இணையத்திலும் நுழைவுச்சீட்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு எதிரான இந்தியாவின் அடுத்தக்கட்ட நகர்வு: இராணுவத்தில் இணைக்கப்பட்ட அதி பயங்கர ஆயுதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version