Home இந்தியா ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் இராணுவ வீரர்கள் பலி: இந்திய பாதுகாப்புச் செயலாளர் இரங்கல்

ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் இராணுவ வீரர்கள் பலி: இந்திய பாதுகாப்புச் செயலாளர் இரங்கல்

0

ஜம்மு காஷ்மீர்(Jammu and Kashmir) – கத்துவா மாவட்டத்தில் இடம்பெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும், இதற்குப் பின்னால் உள்ள தீய சக்தியை இந்தியா (India) நிச்சயம் முறியடிக்கும் என்று பாதுகாப்புச் செயலாளர் கிரிதர் அரமானே (Giridhar Aramane) தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் நேற்று (08) தீவிரவாதிகள் கைக் குண்டு தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்தமை குறித்து இன்று (09) எக்ஸ் (X) பக்கத்தில் இட்ட அனுதாப பதிவொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிட்ட அவர், “துணிச்சலான ஐந்து வீரர்களை இழந்தது வருத்தமளிக்கிறது. அந்தத் தியாகிகளின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னலமற்ற சேவை

அவர்களின் தன்னலமற்ற சேவை என்றென்றும் நினைவுகூரப்படும். அவர்களைக் கொன்றவர்கள் பழிவாங்கப்படுவார்கள். இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ள தீய சக்தியை இந்தியா அழிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh), அந்த பகுதிகயில் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் இராணுவம் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version