Home இலங்கை ஈரானில் இலங்கையர்களை மீட்க முன்வந்த இந்தியா!

ஈரானில் இலங்கையர்களை மீட்க முன்வந்த இந்தியா!

0

ஈரானுக்கும் (Iran) இஸ்ரேலுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களை கருத்தில் கொண்டு, ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை அரசு கடந்த பல நாட்களாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதன்படி, இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு உதவி கோரி, இலங்கை வெளியுறவு அமைச்சகம் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மூலம் இந்திய வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா ஒப்புதல் 

அத்துடன், எல்லை தாண்டுதல் சாத்தியமான இடங்களை இலங்கையர்கள் அடைய முடிந்தால், இந்த செயல்முறைக்கு ஆதரவளிக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக இரு நாடுகளின் இராஜதந்திர பணிகளும் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒபரேஷன் சிந்து

இதற்கிடையில், இந்தியா ஏற்கனவே அதன் ஒபரேஷன் சிந்துவின் கீழ் தனது குடிமக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளது.

110 இந்திய மாணவர்களைக் கொண்ட முதல் குழு வடக்கு ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டு, ஜூன் 17, 2025 அன்று எல்லையைத் தாண்டி ஆர்மீனியாவிற்குள் உதவி செய்யப்பட்டது. பின்னர் ஜூன் 19 அதிகாலையில் யெரெவனில் இருந்து புது டில்லிக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டது.

https://www.youtube.com/embed/bAmz–o5Iq0

NO COMMENTS

Exit mobile version