Home இலங்கை பாகிஸ்தான் நோயாளிக்கு இலங்கையில் சிகிச்சையளித்த இந்திய மருத்துவர்

பாகிஸ்தான் நோயாளிக்கு இலங்கையில் சிகிச்சையளித்த இந்திய மருத்துவர்

0

Courtesy: Sivaa Mayuri

பாகிஸ்தான் லாகூரின் பார்வையற்ற ஒருவருக்கு கொழும்பில் உள்ள கண் மருத்துவமனையில் மும்பையைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணர் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இது, தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பின் ஒரு தனித்துவமான நிகழ்வு வெளிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சபை 

மும்பையைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணரான குரேஸ் மஸ்கதியுடன் குறித்த பாகிஸ்தானியர் தொடர்பு கொண்டிருந்தபோதும், இந்திய மருத்துவ விசாவைப் பெற முடியாமல் போனதால் சிரமங்களுக்கு உள்ளானார்.

இந்தநிலையில் மாநாடு ஒன்றுக்காக கொழும்பு செல்ல திட்டமிட்டிருந்ததால், அங்குள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான உரிமத்திற்காக இலங்கை மருத்துவ சபையை அணுகியதாகவும், அதனை இலங்கை மருத்துவ சபை ஏற்றுக்கொண்டதாகவும் மருத்துவர் மஸ்கதி கூறியுள்ளார்.

இதனையடுத்து உள்ளூர் கண் அறுவை சிகிச்சை நிபுணர் குசும் ரத்நாயக்கவின் உதவியுடன், செப்டம்பர் 13 அன்று கொழும்பில் குறித்த பாகிஸ்தானியருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 48 மணித்தியால அறுவை சிகிச்சையின் பின்னர் நோயாளியின் பகுதி பார்வை மீளத்திரும்பியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version