Home இந்தியா இந்திய கால்பந்துக்கு தடை – கடுந்தொனியில் எச்சரிக்கும் FIFA

இந்திய கால்பந்துக்கு தடை – கடுந்தொனியில் எச்சரிக்கும் FIFA

0

இந்திய கால்பந்துக்குத் தடை விதிக்கப்படும் என்று பிபா (FIFA) என்ற சர்வதேச கால்பந்து அமைப்பு எச்சரித்துள்ளது.

ஃபிபா அனுப்பிய கடிதத்தில்,’ அக்டோபர் 30 க்குள் திருத்தப்பட்ட நிர்வாக விதிகளை ஏற்காத பட்சத்தில் இந்திய கால்பந்துக்கு தற்காலிக தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை எடுப்பதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை.

பலமுறை உறுதி அளித்த போதும், இது குறித்த வழக்கு 2017 முதல் நீதிமன்றத்தில் இருப்பதாக தெரிவித்து, இறுதி செய்யாமல் திணறுகின்றனர்.

நிர்வாக விதிகள் குறித்த வழக்கு

புதிய ஒப்பந்தம் செய்யப்படாமல், உள்ளூர் தொடர் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய கால்பந்தில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது என தெரிவித்துள்ளது.

இதேவேளை, அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு நிர்வாக விதிகள் குறித்த வழக்கு, கடந்த 2017 முதல் இந்திய உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்தநிலையில் கால்பந்து அமைப்பை நிர்வகிக்க, தற்காலிக குழுவை நீதிமன்றம் நியமித்தது.

எனினும் இந்தியக் கால்பந்தில் மூன்றாம் நபர் தலையீடு உள்ளது எனக் குற்றம் சுமத்தியிருந்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு, கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய கால்பந்துக்குத் தடை விதித்தது.

தற்காலிக குழு 

இதன் பின்னர், தற்காலிக குழு கலைக்கப்பட்டுத் தேர்தலும் நடத்தப்பட்டதன் காரணமாக, ஃபிபாவும் தமது தடையை நீக்கியது.

எனினும், திருத்தப்பட்ட நிர்வாக விதிகளை முறைப்படி ஏற்றுக் கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள, சர்வதேச கால்பந்து அமைப்பு, இந்திய கால்பந்துக்குத் தடை விதிக்கப்படும் என்று ஃபிபா எச்சரித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version